ஹோட்டல் ஸ்டைலில் சுவையான பக்கோடா குழம்பு..? கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க..!?
பொதுவாக வீடுகளில் சமைக்கும் உணவுகளை விட பலருக்கும் ஹோட்டல்களில் சமைக்கப்படும் உணவுகள் தான் பிடித்தமானதாக இருக்கும். மேலும் வீடுகளிலும் என்ன குழம்பு செய்வது என்பது தினமும் குழப்பமாகவே இருந்து வரும். அப்படி இருக்க சிம்பிலா செய்ய கூடிய ஒரு ரெசிபி தான் பக்கோடா குழம்பு..
இந்த குழம்பை நீங்கள் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளுக்கு வைத்து சாப்பிடலாம். உங்க வீட்டில் இருக்கும் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்தக் குழந்தை விரும்பி சாப்பிடுவார்கள்.ப்இப்போது இந்த பக்கோடா குழம்பு எப்படி பக்கோடா செய்வது என்பதை குறித்து இத்தொகுப்பில் நாம் காணலாம்.
பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - 1 கப், பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகாய் வத்தல் - 2, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 10பல், கிராம்பு -1, கொத்தமல்லி இலைகள் - ¼ கப், வெங்காயம் - 1 நறுக்கியது, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
குழம்புக்கு செய்ய தேவையான பொருட்கள் :
புளி - எலுமிச்சை அளவு, வெங்காயம் - 1 நறுக்கியது, தக்காளி - 1 நறுக்கியது, கீறிய பச்சை மிளகாய் - 1, கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி, சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, துருவிய தேங்காய் - ¼ கப், கசகசா - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி, பிரியானி இலை - 1, இலவங்கப்பட்டை - 1, கிராம்பு - 2
செய்முறை : முதலில் கடலைப்பருப்பை 30 நிமிடங்களுக்கு நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்த கடலைப்பருப்பை பூண்டு, இஞ்சி கொத்தமல்லி, வரமிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்பு அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பக்கோடா பொரித்து எடுப்பது போல நன்றாக பொன்னிறத்துக்கு மாறும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு நன்றாக பொரிந்ததும் பெருஞ்சீரகம் இலவங்கம், கிராம்பு, பிரியாணி இலை, சேர்த்து வறுக்கவும். இதில் பொடியாக நறுக்கி வைத்த இஞ்சி மற்றும் பூண்டுகளை போட்டு நன்றாக வதக்கிய பின்பு நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்க்க வேண்டும். பொன்னிறமாக வதங்கிய பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், சாம்பார் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.
பின்பு கரைத்து வைத்த புளித்தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்ததும் அதில் தேங்காய், கசகசா, சீரகம் சேர்த்து அரைத்து குழம்பு ஊற்றி மூடி போட்டு எண்ணெய் பிரிய கொதிக்க விட வேண்டும். பின்பு இந்த குழம்பில் பக்கோடாவை சேர்த்து மூடி போட்டு ஆற வைத்தால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் பக்கோடா குழம்பு தயார்.
Read more ; “புடைவையை தூக்கி கட்டும்மா… பார்க்க கஷ்டமா இருக்கு” தொகுப்பாளினிக்கு பிரபல நடிகர் கொடுத்த அட்வைஸ்..