முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீர் ராஜினாமா!

11:13 AM Apr 28, 2024 IST | Mari Thangam
Advertisement

டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நடைபெற்று வருகிற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு அதன்மூலம் தேர்தலை எதிர்கொள்கின்றன.

இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளாக காங்கிரஸ் , டெல்லியில் ஆம் ஆத்மி, தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி பீகாரில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், மகாராஷ்டிராவின் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ், காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில்,  “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரிவு எதிராக இருந்தது. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது.” என தெரிவித்துள்ளார்.

Tags :
#Delhiarvinder singh lovelyCONGRESSloksabha elections 2024
Advertisement
Next Article