For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாஜகவின், தேர்தல் தோல்வி பயத்தால் டெல்லி முதல்வர் கைது..! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..!

11:39 PM Mar 21, 2024 IST | 1Newsnation_Admin
பாஜகவின்  தேர்தல் தோல்வி பயத்தால் டெல்லி முதல்வர் கைது    மு க ஸ்டாலின் கடும் கண்டனம்
Advertisement

2024 தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாக பாசிச பாஜக அரசு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Arvind Kejriwal arrested: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டு 849 விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனைக்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement

டெல்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, புதிய மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் பெருமளவு ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவித்ததை அடுத்து சிபிஐ நடத்திய விசாரணையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமால் இருந்தார். மேலும் இது தொடர்பாக கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

நீதிமன்றம் ஜாமின் வழங்கிய பிறகும், அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய நிலையில் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் "தான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும்" என புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கோரிக்கையை நிராகரித்தார், மேலும் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தார்.

இந்நிலையில் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை(ED) இன்று கைது செய்தது. இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு விசாரணை அமைப்பால் முதல்வர் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவால் அமலாக்க இயக்குனரகத்தின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார் எனவும், சிறைக்குப் போனாலும் அங்கிருந்தே முதல்வராகவே பணியை தொடருவார் என ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இன்றிரவே உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாத்துறையில் கைது செய்யப்ட்டுள்ளதற்கு தமிழக முதலவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், "தேர்தல்2024 தோல்வி பயத்தால் உந்தப்பட்டு, மாண்புமிகு டெல்லி முதல்வரை கைது செய்ததன் மூலம் பாசிச பாஜக அரசு வெறுக்கத்தக்க ஆழத்தில் மூழ்கியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால், சகோதரன் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்டு மாநில முன்னாள் முதல்வர்) ஆகியோரை அநியாயமாகக் குறிவைப்பதைத் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் சிதைவு ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது. இதுவரை ஒரு பாஜக தலைவர் கூட விசாரணை அல்லது கைது செய்யப்படுவதில்லை.

பாஜக அரசாங்கத்தால் எதிர்க்கட்சித் தலைவர்களை இடைவிடாமல் துன்புறுத்துவது ஒரு அவநம்பிக்கையான சூனிய வேட்டையை சாடுகிறது. இந்த கொடுங்கோன்மை பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது, பாஜகவின் உண்மையான நிறத்தை வெளிக்கொண்டு வருகிறது. ஆனால் அவர்களின் வீண் கைதுகள் நமது உறுதியை எரியூட்டுகின்றன. இது இந்திய கூட்டணியின் வெற்றிப் பயணத்தை பலப்படுத்துகிறது" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: Election 2024 | பாஜக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்.!! திருநெல்வேலியில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.!!
Tags :
Advertisement