For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாணவியை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!! வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் ஷாக்..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

The judges ordered the accused Satish to be produced via video conference on January 29th and adjourned the case.
04:45 PM Jan 23, 2025 IST | Chella
மாணவியை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை     வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் ஷாக்     ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Advertisement

கடந்த 2022ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யபிரியாவை சதீஷ் என்ற இளைஞர் ஓடும் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், வழக்கு தொடர்பான நோட்டீஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷுக்கு வழங்கப்பட்டதாகவும், அவர் அதனை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். சதீஷுக்காக இன்று வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை.

இது குறித்து அவரது கருத்தை தெரிவிக்க காணொலிக் காட்சி மூலம் சதீஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக கூறினார். இதையடுத்து, வழக்கறிஞர் வைத்துக் கொள்கிறாரா? அல்லது சட்ட உதவி தேவைப்படுமா? என்பது குறித்து விளக்கம் தரும் வகையில், குற்றவாளி சதீஷை ஜனவரி 29ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Read More : 2 மாதங்கள் தான் ஆச்சு..!! கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு செல்ல ரெடியான மனைவி..!! கணவரின் விபரீத விளையாட்டால் பறிபோன உயிர்..!!

Tags :
Advertisement