தீபாவளிக்கு மறுநாள்..!! கிராம சபைக் கூட்டம் ஒத்திவைப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் நவம்பர் 1ஆம் தேதி நடைபெறவிருந்த கிராமசபை கூட்டத்தை ஒத்திவைத்து, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜனவரி 26, உலக தண்ணீர் தினமான மார்ச் 22, தொழிலாளர் தினம் மே 1, சுதந்திர தினமான ஆக.15, காந்தி ஜெயந்தியான அக். 2, உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1 என மொத்தம் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் மார்ச் 22, மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், நவம்பர், 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளிக்கு மறுதினம் என்பதால் நவ.1ஆம் தேதியை விடுமுறையாக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டத்தை ஒத்திவைக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அரசை வலியுறுத்தினர்.
இதை ஏற்றுக் கொண்டு கிராம சபைக் கூட்டத்தை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம சபைக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Read More : வழக்கு தொடர்பாக வந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த வக்கீல்..!! வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை பலாத்காரம்..!!