For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி ரிப்போர்ட்...! 2023-ம் ஆண்டில் நிலநடுக்கங்கள் அதிகரித்துள்ளது...! தேசிய நில அதிர்வு மையம் தகவல்...!

08:59 AM Dec 07, 2023 IST | 1newsnationuser2
அதிர்ச்சி ரிப்போர்ட்     2023 ம் ஆண்டில் நிலநடுக்கங்கள் அதிகரித்துள்ளது     தேசிய நில அதிர்வு மையம் தகவல்
Advertisement

2023-ம் ஆண்டில் நிலநடுக்கங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வட இந்தியாவிலும் நேபாளத்திலும் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளிலும் நடப்பாண்டிலும் டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு மையம் பதிவு செய்துள்ளபடி இந்த பகுதிகளில் ஏற்பட்ட பூகம்ப நிகழ்வுகளின் விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

Advertisement

2020-ம் ஆண்டில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரை பதிவான நில அதிர்வுகள் 42. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 18, 5.0 முதல் 5.9 வரை 1 என பதிவாயின. 6.0 முதல் 6.9 வரையில் நில நடுக்கம் பதிவாகவில்லை. 2021-ம் ஆண்டில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரை பதிவான நில அதிர்வுகள் 41. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 18, 5.0 முதல் 5.9 வரை 1 என பதிவாயின. 6.0 முதல் 6.9 வரையில் நில நடுக்கம் பதிவாகவில்லை.

2022-ம் ஆண்டில் 3.0 முதல் 3.9 வரையிலான ரிக்டர் அளவில் பதிவான நில அதிர்வுகள் 41. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 20, 5.0 முதல் 5.9 வரை 3 என பதிவாயின. 6.0 முதல் 6.9 வரையில் 1 நில நடுக்கம் பதிவானது.

2023-ம் ஆண்டில் நவம்பர் மாதம் வரையில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரையிலான நில அதிர்வுகள் 97. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 21-ம், 5.0 முதல் 5.9 வரை 4 நிலநடுக்கங்களும், 6.0 முதல் 6.9 வரையில் 2 நில நடுக்கங்களும் பதிவாயின.இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) இந்தியாவின் நில அதிர்வு மண்டல வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

Advertisement