சிக்கன் பிரியர்களே எச்சரிக்கை!!! சிக்கனின் இந்தப் பகுதியை சாப்பிடுவதால் வரும் பேராபத்து..
அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஒரு உணவு என்றால் அது கண்டிப்பாக சிக்கன் ஆகத்தான் இருக்க முடியும். சிக்கனை எப்படி சாப்பிடாலும் அது சுவையாகத்தான் இருக்கும். இதனால் தான் சிக்கன் ஃப்ரை, கபாப், சிக்கன் 65 போன்ற பல பேர்களில் சிக்கன் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சிலருக்கு சிக்கன் இல்லை என்றால் சாப்பாடே இறங்காது. அந்த அளவிற்கு சிக்கன் வெறியர்கள் இருப்பது உண்டு. சிக்கனில் அதிக அளவு ப்ரோடீன் உள்ளது. குழந்தைகளுக்கு கட்டாயம் சிக்கன் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைப்பது உண்டு. அந்த அளவிற்கு சிக்கனில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
ஆனால் நாம் சிக்கனை அதிகமாகச் சாப்பிடுவது தான் பிரச்சனை. குறிப்பாகக் குளிர்காலத்தில் சிக்கன் சாப்பிடுபவர்கள் ஒரு சில விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும். என்ன தான் கோழி இறைச்சி ஆரோக்கியமானதாக இருந்தாலும், கோழியின் ஒரு பகுதி உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். ஆம், அந்த ஒரு பகுதி சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், நமது ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்..
உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் அந்த ஒரு பகுதி சிக்கனின் தோல் தான். சிலருக்கு சிக்கனின் தோலை சாப்பிட பிடிக்காது. இதில் ஊட்டச்சத்து மதிப்பு எதுவும் இல்லை என்றாலும், ஒரு சிலர் சிக்கனின் தோலை சாப்பிட விரும்புவர்கள். இன்றைக்கு உள்ள பல வீடுகளிலும் ஹோட்டல்களிலும் சிக்கனை தோலுடன் தான் சமைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. ஏனென்றால், தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் சிக்கன் தோலில் அதிகம் உள்ளது.
கோழியின் தோலை சாப்பிடுவதால், அதில் உள்ள கெட்ட கொழுப்புகள், உடல் எடையை அதிகரித்து விடும். இதனால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்புகள் அதிகம். இதனால் இனி மறந்தும் கூட சிக்கன் தோலை சாப்பிட்டு விடாதீர்கள்.