டெங்கு கொசு எப்போது கடித்தால் ஆபத்து..!! அதிகம் கடிக்கும் இடம் எது..? அறிகுறிகள் இதுதான்..!!
மழைக்காலம் தொடங்கியது.. மழைக்காலம் புத்துணர்ச்சி ஊட்டும் காலமாக இருந்தாலும் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் காலமாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்கள் இந்த மழை காலத்தில் தான் அதிகம் பரவுகின்றன.
டெங்கு வைரஸை சுமந்து செல்லும் கொசு ஒரு நபரை கடித்துவிட்டு, மற்றொருவரை கடிக்கும்போது டெங்கு வைரஸ் பரவுகிறது. நாடு முழுவதும், கடந்த சில வாரங்களாக பதிவாகி இருக்கும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பருவநிலை எப்போது எப்படி மாறும் என்று தெரியாத சூழல், திடீரென்று அதிக மழை, என்று அனைத்துமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
டெங்கு கொசு இரவில் கடிக்குமா..?
பொதுவாக இரவு நேரத்தில் அதிகமாக கொசுக்கடியை பலரும் பார்த்திருக்கலாம். எனவே, இரவு நேரத்தில் மட்டும் தான் கொசுக்கள் கடிக்கும் பகல் நேரத்தில் கொசுக்கள் கடிக்காது என்ற ஒரு தவறான நம்பிக்கை பலரிடமும் உள்ளது. இரவில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா போன்ற தொற்றுகளை எந்த அளவுக்கு ஒரு கொசுவால் ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமோ, அதே அளவுக்கு பகலிலும் டெங்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
ஒரு நபரை கொசு எந்த இடத்தில் கடிக்கிறது என்பது கூட டெங்கு காய்ச்சலுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதை பற்றி வெளியான அறிக்கையின்படி, டெங்கு வைரஸை சுமந்து செல்லும் கொசுக்கள், பெரும்பாலும் கை முட்டி மற்றும் கால் முட்டி ஆகிய பகுதிகளில் தான் கடிக்கிறது. சின்னதாக கடித்தால் கூட, நோய் தொற்று ஏற்பட்டு அதற்கான அறிகுறிகள் தோன்றிவிடும்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் :
டெங்கு கொசு கடித்த 4 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் தொற்று உடலில் பரவி அறிகுறிகளை தோற்றுவிக்கும். டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் வயது, அவருக்கு ஏற்கனவே இருக்கும் உடல் நல பாதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அறிகுறிகள் மாறுபடும். பொதுவான அறிகுறிகளாக, காய்ச்சல், எலும்பு வலி & அசௌகரியம், தசை வலி, உடல் அசதி, கண்கள் சிவந்து போதல், வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை இருக்கும் என கூறப்படுகிறது.
Read More : மருமகளுடன் உல்லாசம்..!! எரிந்த நிலையில் கிடந்த உடல்..!! 72 வயது முதியவரை தீர்த்துக் கட்டிய நண்பன்..!!