சுழலும் வங்கக்கடல்!. தமிழ்நாடு, புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!.
Storm warning cage: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை ஆந்திரா கடலோரப்பகுதி சென்னை இடையே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 35 கிமீ - 55 கிமீ வேகத்தில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனால் கடலிலின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் தமிழகம், புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மழை மற்றும் புயல் அபாயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இதன் தாக்கத்தை கண்காணிக்க கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Readmore: ஆந்திராவிலும் வெளுத்து வாங்கும் கனமழை!. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!