முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னைக்கு மீண்டும் ஆபத்தா..? டெல்டா பகுதி மக்களே உஷார்..!! வெதர்மேன் கொடுத்த அப்டேட்..!!

11:20 AM Dec 15, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், வரும் 17ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (15.12.2023) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Advertisement

அதேபோல் தமிழ்நாட்டில் நாளை (16.12.2023) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 17ஆம் தேதி தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதற்கிடையே, சென்னையில் வருகிற 18ஆம் தேதி மீண்டும் புயல் தாக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை மறுத்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதி மக்கள் மழை தொடர்பாக அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். வருகிற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மழைக்கான ஹாட் ஸ்பாட்டாக டெல்டா மாவட்டங்களும், தென் மாவட்டங்களும் இருக்கும் என கூறியுள்ளார்.

Tags :
கனமழைடெல்டா மாவட்டங்கள்மழைவானிலை ஆய்வு மையம்வெதர்மேன்
Advertisement
Next Article