முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடடே..!! இனி இவ்வளவு ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணலாமா..? பயணிகளே நோட் பண்ணிக்கோங்க..!!

01:40 PM Apr 27, 2024 IST | Chella
Advertisement

இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். டிக்கெட் முன்பதிவு செய்தால், செல்ல வேண்டிய இடத்திற்கு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் பயணிக்க முடியும் என்பதால் இன்னும் கூட ரயில் பயணத்தின் மீதான மவுசு குறையவில்லை. இந்நிலையில், கடந்த 2015 ஏப்ரல் மாதம் கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

Advertisement

இதன் மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரயில்களுக்கான டிக்கெட் ஆகியவற்றை பெறும் வசதி உள்ளது. இருப்பினும், ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், ஜியோ பென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.

இதனால், யூடிஎஸ் செயலி மூலம் ரயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட்டை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Read More : சுட்டெரிக்கும் கோடை வெயில்..!! அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதல்வர்..!! மக்கள் மகிழ்ச்சி..!!

Advertisement
Next Article