DA hike Impact | இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% அலோவன்ஸ் உயர்வு.!! சலுகைகள் மற்றும் தாக்கம்.!!
DA Hike Impact: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான உதவித்தொகை விகிதங்கள் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. இது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பதற்கான அறிக்கை ஒன்றை ஓய்வூதியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் (DA) 4% உயர்த்தி அதனை 50 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இந்த சரிசெய்தல் அவர்களின் வருமானத்தில் விலைவாசி உயர்வால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ளும் நோக்கத்தில் செய்யப்பட்டது. இதேபோல், மத்திய அரசு ஓய்வு பெற்றவர்களுக்கும் 4% அகவிலை நிவாரணம் (DR) 50% ஆக உயர்த்தப்பட்டு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைச் சமாளிக்க ஓய்வூதியத்தை அதிகரிக்கும்.
இந்த அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை (CEA) மற்றும் விடுதி மானியம் போன்றவை தானாகவே 25% வரை திருத்தப்பட்டது. ஏப்ரல் 25, 2024 அன்று மத்திய ஓய்வூதியத் துறை வெளியிட்ட அரசாணையில் குழந்தைகளுக்கான கல்விக் கொடுப்பனவு மற்றும் விடுதி மானியத்தின் வரம்புகள் அகவிலைப்படி (DA) 25% அதிகரிக்கும் என்று கூறியது. மேலும் திருத்தப்பட்ட ஊதிய அமைப்பில் 50% வரை அடையும் எனவும் குறிப்பிட்டு இருந்தது
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 50% உயர்த்தியதன் விளைவாக குழந்தைகள் கல்விக் கொடுப்பனவு (CEA) மற்றும் விடுதி மானியம் அனுமதிக்கப்படும் அளவு குறித்து பல்வேறு தரப்பிலிருந்து குறிப்புகள் பெறப்படுவதாக மத்திய நீதி துறை, ஜனவரி 1, 2024 அன்று வெளியிடப்பட்ட அரசாணை மேற்கோள் காட்டி மத்திய செலவீனத்துறை மார்ச் 12, 2024 அன்று தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை (CEA) மற்றும் விடுதி மானியத்திற்கான திருத்தப்பட்ட வரம்புகள் பின்வருமாறு:
குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை (CEA) திருப்பிச் செலுத்துதல்: மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைக்கு ரூ. 2812.5 மற்றும் விடுதி மானியத்திற்கு ரூ. 8437.5 நிலையான மாதாந்திரத் தொகையை வழங்கும்.
மாற்றுத்திறனாளி குழந்தைகள்: மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கொண்ட அரசாங்கப் பணியாளர்கள், அவர்களின் உண்மையான செலவினங்களைப் பொருட்படுத்தாமல், மாதத்திற்கு ரூ. 5625 நிலையான தொகையை இரட்டிப்பாகப் பெறுவார்கள்.
குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு சலுகைகள்: மாற்றுத்திறனாளி பெண்களுக்கான குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு சலுகை கட்டணங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு உட்பட்டு, மாதத்திற்கு ரூ.3750 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வருகின்றன. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தில் DA உயர்வின் தாக்கம் கணிசமாக இருக்கும்.
உதாரணமாக, மாதத்திற்கு ரூ.45,700 அடிப்படைச் சம்பளம் பெரும் மத்திய அரசு ஊழியர் இதற்கு முன்பு 46% அகவிலை படியுடன் ரூ.21,022 உதவித்தொகை பெற்று வந்தார். தற்போது டிஏ 50% ஆக உயர்த்தப்பட்டு இருப்பதால் அவரது உதவித்தொகை ரூ.22,850 ஆக உயரும், இதன் விளைவாக ரூ.1,828 அதிகரிக்கும்.