முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் வழக்குப்பதிவு..!! நடந்தது என்ன..?

11:40 AM Feb 07, 2024 IST | 1newsnationuser6
Advertisement

கோவை சேர்ந்த சர்மிளா என்ற இளம்பெண் கடந்த வருடம் தனியார் பேருந்தை இயக்கி வந்தார். பேருந்து ஓட்டுநராக இருந்த ஷர்மிளா சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானார். இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சர்மிளாவை, காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி தட்டிக்கேட்டுள்ளார். தட்டிகேட்டபோது போக்குவரத்து எஸ்.ஐ. ராஜேஸ்வரியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக சர்மிளா மீது புகார் அளிக்கப்பட்டது.

Advertisement

அதாவது, காந்திபுரம் அருகே போக்குவரத்து காவலரை சர்மிளா, அவரது காரில் அமர்ந்தபடி, செல்போனில் படம் பிடித்து காவலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த பெண் காவலர் வாகனங்களை வழிமறித்து பணம் வாங்குவதாகவும், அபராதம் விதிப்பதாக கூறி பணத்தை வாங்கிவிட்டு, அபராதம் விதிக்கவில்லை என்று ஒரு நிமிடம் அளவிலான வீடியோவை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குறித்து, தவறான தகவல்களை பதிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

காவல் உதவி ஆய்வாளரின் புகாரையடுத்து, 3 பிரிவுகளில் சர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது சர்மிளாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் பேருந்தை இயக்கி கொண்டிருந்த போது ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக அவர் வெளியேறினார். பிறகு கமல்ஹாசன் சர்மிளாவுக்கு கார் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
காவல்துறைகோவை மாவட்டம்வழக்குப்பதிவுஷர்மிளா
Advertisement
Next Article