For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு..!! 17 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்..!!

04:49 PM Dec 08, 2023 IST | 1newsnationuser6
வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு     17 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்
Advertisement

வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியதாக 17 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

Advertisement

வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அவர்களது தகவல்களை திருடி விற்பனை செய்ததாக 17 செயலிகளை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 17 செயலிகளும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் வாடிக்கையாளர்களை உளவு பார்த்ததும் தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்களின் செல்போனில் இருக்கும் ஏராளமான தகவல்களை இந்த செயலிகள் திருடி முறைகேடாக பயன்படுத்தியுள்ளன. இவை பெரும்பாலும் கடன் அளிக்கும் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களை குறிவைத்து இந்த நிறுவனங்கள் இயங்கியதாகவும், இதையடுத்து 17 செயலிகள் முற்றிலும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
Advertisement