அது என்ன CTC..? மாத சம்பளம் வாங்குபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!
உங்களின் அப்பாயின்ட்மெண்ட் லட்டரில் போட்டுள்ள தொகைக்கும் (CTC), நீங்கள் இறுதியாக கையில் பெறும் தொகைக்கும் உள்ள வித்தியாசம் உங்களை யோசிக்க வைத்திருக்கும். அதற்கு முதலில் CTC என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
சிடிசி (Cost To Company) என்பது நிறுவனம் தனது பணியாளருக்கு செய்யும் நேரடி செலவினம். அதாவது, அடிப்படை சம்பளம், வீட்டுவாடகை, சிறப்பு ஊதியம், போனஸ், தொழிலாளர் வைப்பு நிதியின் பணியாளர் பங்கு, பணிக்கொடை, மருத்துவ செலவுகள், உணவு கூப்பன்கள் போன்றவை சிடிசில் அடங்கும். எடுத்துக்காட்டாக..ஒரு நபரின் அடிப்படை ஊதியம் (Basic Salary) - ரூ.300,000 வீட்டு வாடகை படி (HRA) - ரூ.60,000 மருத்துவ பதிலீடு (Medical Reimbursement) - ரூ.15,000 போக்குவரத்து படி (Conveyance) - ரூ.8,000 ஆண்டுக்கான மொத்த ஊதியம் (CTC Per Annum) - ரூ.3,83,000
பிடித்தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் வீட்டு வாடகை படியில் வரி - ரூ.11,000 தொழிலாளர் சேமநல நிதி (அடிப்படை ஊதியத்தில் 12%)(EPF) - ரூ.36,000 மருத்துவ காப்பீடு (Medical Insurance) - ரூ.4000 தொழில் வரி (Professional Tax)- ரூ.3600 நிகர வருமானம் (Net Salary per Annum) - ரூ.3,39,400 (நிகர மாதாந்திர வருமானம் (Net Salary Per Month- ரூ.28,283) இந்த 28,283 ரூபாய் தான் உங்களது takehome salary. வித்தியாசம் மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து CTC-க்கும் கையில் பெறும் ஊதியத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.
வருமான வரிச் சலுகை எனவே, நீங்கள் ஒரு வேலைக்காக தேர்ந்தெடுக்கப்படும் போது, எந்தெந்த வகையில் பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வரி மற்றும் மருத்துவ காப்பீடு வரிகளையும் மற்றும் கூட்டு மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களையும் உங்களால் தவிர்க்க முடியாது. எனவே, உங்களுடைய ஊதியத்தைப் பற்றி மிகவும் கவனமாக விவாதிப்பதும் மற்றும் பல்வேறு வகையான பிடித்தங்களை புரிந்து கொள்வதும் அவசியமானதாகும். கூப்பன்கள் சில நிறுவனங்களின் பணியாளர்கள் பணத்திற்கு பதிலாக சலுகை கூப்பன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்களுடைய கையில் கிடைக்கும் ஊதியத்திலிருந்து வரி பிடித்தம் செய்யப்படுவது குறைகிறது.
Read more : இன்று இந்த 2 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்..!! 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!