முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தள்ளாடும் தவெக மாநாடு... படையெடுக்கும் மக்கள் கூட்டம்.. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!!

Crowds of people invading the Taveka conference.. Heavy traffic on the road.
01:47 PM Oct 27, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலைக்கு 50,000க்கும் மேற்பட்டோர் வருகை தந்ததால் விழுப்புரம் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டில் 2 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக மாநாட்டால் 10 முதல் 15 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது. வி.சாலை பகுதியில் இருந்து முண்டியம்பாக்கம் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. 

Advertisement

இதனால், மாற்றுப் பாதையில் வாகனங்களை இயக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக தற்போது விக்கிரவாண்டில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு கார்கள், வேன்கள் இருசக்கர வாகனங்கள் என தனியார் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை மாற்று ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் கூட்டேரிப்பட்டு மயிலம் வழியாக விழுப்புரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் செஞ்சி வழியாக திண்டிவனம் செல்லலாம்.

திருச்சியில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை செல்பவர்கள் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி வழியாக சென்று அங்கிருந்து திண்டிவனம் சென்று சென்னை செல்லலாம் அதேபோல திருச்சியில் இருந்து விழுப்புரம் வரக்கூடிய வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து கூட்டேரிப்பட்டு வழியாக மயிலம் சென்று அங்கிருந்து விழுப்புரம் போகலாம். மேலும் கூட்டேரிப்பட்டு சாலையை இலகுரக வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களை பொறுத்தவரை திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் புதுச்சேரி வழியாக சென்று விழுப்புரம் வருவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்று ஏற்பாடு போக்குவரத்து நெரிசல் கட்டுப்படும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; தவெக மாநாட்டில் மயங்கி விழும் மக்கள்..!! குடிநீர் கிடைப்பதில் சிக்கல்..? கடும் கோபத்தில் விஜய்..!!

Tags :
traffictvk vijay
Advertisement
Next Article