For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எல்லை மீறும் பேச்சுக்கள்!! கோபமடைந்த தேர்தல் ஆணையம்!! பாஜக, காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்களுக்கு கடிவாளம்!!

05:40 AM May 23, 2024 IST | Baskar
எல்லை மீறும் பேச்சுக்கள்   கோபமடைந்த தேர்தல் ஆணையம்   பாஜக  காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்களுக்கு கடிவாளம்
Advertisement

பாஜக,காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் தேர்தல் பிரசாரங்களில் எல்லை மீறி பேசுவது தேர்தல் ஆணையத்தை கோபமடைய செய்துள்ளது.

Advertisement

மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எஞ்சிய இரு கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், கடந்த 3 கட்ட தேர்தல் நிறைவடைந்த பின்னர் இரண்டு தேசிய கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களின் எல்லை மீறும் தேர்தல் பிரசாரம் தேர்தல் ஆணையத்தை கோபமடைய செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக இரு தேசிய கட்சிகளான பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி அறிவுறுத்தியுள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்களின் நட்சத்திர பேச்சாளர்கள் ஜாதி, மத மற்றும் வகுப்புவாத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய எந்த ஒரு பிரசாரமும் மேற்கொள்ளக்கூடாது. அதனை உடனே நிறுத்த வேண்டும். பிரசாரத்தின் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு முறையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதனைக் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூஜ கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நமது ராணுவத்தில் அரசியலை கலக்கும் வகையில் அக்னிவீர் திட்டம் குறித்தும், இந்திய அரசியலமைப்பு சாசனம் ஒழிக்கப்படலாம் அல்லது விற்கப்படலாம் என தரம் தாழ்ந்து பேசுவதையும் நிறுத்த வேண்டும். இது போன்ற தவறான எண்ணங்களை உருவாக்கக்கூடிய பிரசாரத்தை காங்கிரஸ் நட்சத்திர பிரச்சாரகர்கள் வெளியிடக்கூடாது அரசியல் சாசனத்தை விமர்சிக்கக்கூடாது. இவ்வாறு அந்த கடித்தில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Read More: ’Goat’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்..!! அமெரிக்கா to சென்னை..!! விஜய்யின் அடுத்த பிளான்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Advertisement