விஜய்யின் அடுத்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்..? உதயநிதி ஸ்டாலின் மிரட்டல்..!! பரபரப்பை கிளப்பிய அர்ஜுன் சம்பத்..!!
நீட் தேர்வு, கல்வி பொதுப்பட்டியலில் இருக்கக் கூடாது, மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று விஜய் கூறியது கண்டிக்கத்தக்கது என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஜோசப் விஜய் 3 விஷயங்களை கூறி நீட் தேர்வு வேண்டாம் என்று பேசுகிறார். திமுக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆதரித்து பேசுகிறார். இளைஞர் சக்திகளை வைத்து அரசியலுக்கு வந்துள்ளார். மக்கள் மத்தியில் போதைப் பொருள்கள், லஞ்ச ஒழிப்பு ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு படிக்கும் மாணவர்கள் இடையே இந்தியா ஒரு நாடல்ல இந்தியா ஒன்றியம் என்று பேசி பிரிவினையை ஏற்படுத்துகிறார்.
விஜய், கமல்ஹாசன் வரிசையில் இணைந்து விட்டார். கமல் ஒரு காலத்தில் டார்ச் லைட்டை வைத்துக் கொண்டு வாரிசு அரசியல் மற்றும் ஊழல் அரசியலை எதிர்க்கும் மக்கள் நீதி மையம் என்று டிவியை உடைத்தார். பிறகு தற்போது மக்கள் நீதி மையத்தின் சார்பாக திமுகவுடன் கூட்டணி அமைத்து இப்போது திமுகவுக்கு பிரச்சாரம் செய்து வருகிறார். அதுபோல ஜோசப் விஜய் கடந்த முறை பேசியபோது போதைப் பொருட்களை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும், பொதுமக்களுக்கும் அதில் கடமை இருக்கிறது என்று பேசினார்.
போதைப் பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் இடையே அறிவுரைகள் வழங்கினார். அடுத்து அவருடைய கோட் (GOAT) திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஏதாவது சொன்னாரா என்று தெரியவில்லை. அதற்கு பயந்து நேற்றில் இருந்து ஜோசப் விஜய் திமுக-வின் ஊதுகோலாக மாறியுள்ளார். நீட் தேர்வு, கல்வி பொதுப்பட்டியலில் இருக்கக் கூடாது, மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று விஜய் கூறியது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மக்கள் மத்தியில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் விஜய் மீது எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Read More : ஒரு மாதத்திற்கு இதை மட்டும் சாப்பிடாம இருந்து பாருங்க..!! அந்த அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!!