For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகிழ்ச்சி செய்தி...! 2026-ம் ஆண்டு வரை பயிர் காப்பீடு திட்டம் தொடரும்... மத்திய அரசு ஒப்புதல்...!

Crop insurance scheme to continue till 2026
05:45 AM Jan 02, 2025 IST | Vignesh
மகிழ்ச்சி செய்தி     2026 ம் ஆண்டு வரை பயிர் காப்பீடு திட்டம் தொடரும்    மத்திய அரசு ஒப்புதல்
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22 முதல் 2025-26 வரை 69,515.71 கோடி ரூபாய் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை 2025-26 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு 2025-26 வரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இயற்கைப் பேரழிவுகளிலிருந்து பயிர்களை பாதுகாக்க உதவும்.

Advertisement

இது தவிர, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, இழப்பீட்டைக் கணக்கிடுதல் மற்றும் கோரிக்கைகளை தீர்த்து வைத்தல் ஆகியவற்றை அதிகரிப்பதற்கும் பெரும் அளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குஅமைச்சரவை அனுமதித்துள்ளதோடு ரூ.824.77 கோடி தொகுப்பு நிதியுடன் புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியத்தை உருவாக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

யெஸ்-டெக், விண்ட்ஸ் போன்ற திட்டங்களின் கீழ் தொழில்நுட்ப முயற்சிகளுக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குமா நிதியளிக்க இந்த நிதியம் பயன்படுத்தப்படும். தொலையுணர்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மகசூல் மதிப்பீடுகளுக்கு குறைந்தபட்சம் 30% முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 9 பெரிய மாநிலங்கள் அதாவது ஆந்திரா, அசாம், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை இந்த தொழில்நுட்பத்தைத் தற்போது செயல்படுத்தி வருகின்றன. மத்தியப் பிரதேசம் 100% தொழில்நுட்ப அடிப்படையிலான மகசூல் மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது.

வட்டார அளவில் தானியங்கி வானிலை மையங்களையும், ஊராட்சி அளவில் தானியங்கி மழைமானி நிலையங்களையும் அமைக்க வானிலை தகவல் மற்றும் வலைப்பின்னல் தரவு அமைப்புகள் (விண்ட்ஸ்) திட்டமிட்டுள்ளன. விண்ட்ஸ் திட்டத்தின் கீழ், தற்போதைய நெட்வொர்க் எண்ணிக்கையில் 5 மடங்கு அதிகரிப்புடன் ஹைப்பர் லோக்கல் வானிலை தரவு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேரளா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, அசாம், ஒடிசா, கர்நாடகா, உத்தராகண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 9 பெரிய மாநிலங்கள் 'விண்ட்ஸ்' திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தை செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டங்களின்கீழ் அதிகபட்ச பலன்களை அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக பிரீமியம் மானியத்தில் 90 சதவீதத்தை வடகிழக்கு மாநிலங்களுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்கிறது. இருப்பினும், இத்திட்டம் தன்னார்வத் திட்டம் என்பதாலும், வடகிழக்கு மாநிலங்களில் மொத்த பயிரிடப்படும் பரப்பு குறைவு என்பதாலும், நிதி ஒப்படைக்கப்படுவதைத் தவிர்க்கவும், நிதி தேவைப்படும் பிற வளர்ச்சித் திட்டங்களில் மறு ஒதுக்கீடு செய்யவும் நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement