For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Crime | அடப்பாவி..!! இதெல்லாம் ஒரு காரணமா..? தாய், தம்பியை கொடூரமாக கொன்ற மூத்த மகன்..!!

In Chennai, the police arrested a young man who brutally stabbed his mother and younger brother to death and wrapped them in plastic wrap.
01:13 PM Jun 22, 2024 IST | Chella
crime   அடப்பாவி     இதெல்லாம் ஒரு காரணமா    தாய்  தம்பியை கொடூரமாக கொன்ற மூத்த மகன்
Advertisement

சென்னையில் தாய், தம்பியைக் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சென்னை திருவொற்றியூர் திருநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பத்மா (45). இவர், அக்குபஞ்சர் மருத்துவர். இவரது கணவர் முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு நிதிஷ் (20) மற்றும் சஞ்சய் (14) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். நிதிஷ் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இரண்டாவது மகன் சஞ்சய் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நிதிஷ் தனது தாய் பத்மா மற்றும் தம்பி சஞ்சய் ஆகிய இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு இருவரின் உடல்களையும் பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி, நிதிஷ் அம்மாவையும், தம்பியையும் தான் கொலை செய்து விட்டதாக வாய்ஸ் மெசேஜை உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும், தன்னை தேட வேண்டாம் தானும் தற்கொலை செய்ய போவதாகவும் தெரிவித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர் மகாலட்சுமி, பத்மாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நிதிஷை வலைவீசி தேடி வந்தனர். அப்போது குப்பம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அரியர் இருந்ததை முடிக்க சொல்லி கண்டித்ததால் தாய் மற்றும் தம்பியை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

Read More : பெற்றோர்களே..!! உங்கள் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்..!! பணம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

Tags :
Advertisement