கிரிக்கெட் வீரர் டூ டிஎஸ்பி!. முகமது சிராஜ்-க்கு தெலங்கானா அரசு கவுரவம்!
Mohammed Siraj: இந்திய அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இன்று துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2007ம் ஆண்டுக்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. குறிப்பாக இந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அந்தவகையில், இந்திய அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், ஒரு நாள், டெஸ்ட், டி.20 என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.
இதனால், அவரது சொந்த மாநிலமான தெலங்கான மாநில அரசு அவருக்கு குரூப் 1 அளவில் அரசுப் பணி வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி அவருக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கானா காவல்துறை இயக்குநரிடம் துணைக் காவல் கண்காணிப்பாளராக இன்று முகமது சிராஜ் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். இது மட்டுமின்றி முகமது சிராஜுக்கு அரசு தரப்பில் இருந்து சாலை எண் 78, ஜூப்ளி ஹில்ஸில் 12 செண்ட் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: பகீர்.. 4 ஆண்டுகளாக பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை..!!