முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Credit Card பில் கட்டுவதில் சிக்கல்..!! ரிசர்வ் வங்கி அமல்படுத்திய புதிய நடைமுறை..!! இனி இப்படி மட்டுமே செலுத்த முடியும்..!!

RBI is going to implement some regulations for credit card bill settlement. That means, henceforth credit card bill can be paid only through the billing network under the control of RBI.
06:19 PM Jun 22, 2024 IST | Chella
Advertisement

கிரெடிட் கார்டு பில் கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி சில ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்த உள்ளது. அதாவது, இனி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பில்லிங் நெட்வொர்க் வழியாக மட்டுமே கிரெடிட் கார்டு பில் கட்ட முடியும்.

Advertisement

நிதி தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்களான PhonePe, Cred, BillDesk மற்றும் Infibeam Avenues ஆகியவை ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஒழுங்குமுறையால் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகள், 50 கோடிக்கும் மேலான கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்துள்ளது. இருப்பினும், பாரத் பில் கட்டண முறை (BBPS) விதிகளை இந்த வங்கிகள் இன்னும் பின்பற்றவில்லை.

BBPS விதிகளை பின்பற்றாத காரணத்தால், ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு மேல்குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள், கிரெட் மற்றும் ஃபோன்பே போன்ற ஃபின்டெக் தளங்கள் மூலம் தங்கள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்த முடியாது. வரும் ஜூன் 30-க்குள், அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களையும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலம் செலுத்தி முடிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பாரத் பில் பேமென்ட் சிஸ்டத்தின் கீழ் PhonePe மற்றும் Cred போன்ற ஃபின்டெக் நிறுவனங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுவிட்டன. இருப்பினும், புதிய ஒழுங்குமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கிரெடிட் கார்டு கட்டணத்தை செயல்படுத்த முடியாது.

நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு, ஜூன் 30-க்குள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தற்போதைக்கு, ​​அங்கீகரிக்கப்பட்ட 34 கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளில் 8 வங்கிகள் மட்டுமே பாரத் பில் கட்டண முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஃபெடரல் வங்கி, கோடக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ கார்டு மற்றும் BoB கார்டு மட்டுமே இந்த கட்டண முறையை பின்பற்றி வருகிறது. மோசடியான பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்கவும் அதை தடுத்து நிறுத்தவும் கிரெடிட் கார்டு பில் கட்டணத்தை தங்கள் கட்டுப்பாட்டுகள் RBI கொண்டு வரவுள்ளது.

Read More : கொட்டிக் கிடக்கும் வேலை..!! லட்சத்தில் சம்பளம்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!! சூப்பர் வாய்ப்பு..!!

Tags :
BANKbillcredit cardRBI
Advertisement
Next Article