சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்…!
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு 72 வயதாகிறது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரிக்கு ௭௨ வயதாகிறது. சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மாணவ பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் சீதாராம் யெச்சூரி மேற்கு வங்க மாநிலத்தில் பல முறை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 19 ஆம் தேதி அவருக்கு தீவிர காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவம்னையில் தீவிர சிகிச்சை பிரிவில் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலமானார்.
மறைந்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.