பசும் பால் Vs எருமை பால்…! எந்த பால் உடல்நலத்திற்கு உகந்தது?
பசும்பால் மற்றும் எருமைபால் ஆகிய இவை இரண்டிலும் எது ஆரோக்கியம் நிறைந்த பால் என்பது குறித்து பார்க்கலாம்.
பால் என்பது நமது அன்றாட உணவில் பயன்படுத்தக் கூடிய ஒன்று. பசு மாட்டு பால், எருமை மாட்டு பால், ஆட்டுப்பால் போன்ற விலங்களில் இருந்து நமக்கு பால் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், சோயா மற்றும் பாதாம் பால் போன்ற தாவர மூலங்களிலிருந்தும் நமக்கு பால் கிடைக்கிறது. ஒவ்வொரு வகையான பாலிலும் ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. ஒவ்வொரு பாலும் ஒவ்வொன்றுக்கு ஏற்றதாக அமைகிறது. அந்த வகையில் பசு மாட்டு பால் மற்றும் எருமை பால் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது அதன் ஊட்டச்சத்து, சுவை மற்றும் ஆரோக்கிய நலன்கள் வேறுபடுகின்றன.
பசும் பால் Vs எருமை பால்:
1)பசும் பாலில் 3.2 சதவீத புரதத்துடன் அதிக தரம் வாய்ந்த புரதம் உள்ளது. பசும் பாலில் உள்ள புரதம் கேசின், வே போன்ற புரதங்களால் ஆனது. இது எளிதில் செரிமானமாக கூடியது. அதே நேரத்தில் பசு மாட்டு பாலை விட எருமை மாட்டு பாலில் அதிக புரதம் உள்ளது. சராசரியாக 4.5% புரத அளவு எருமை மாட்டு பாலில் காணப்படுகிறது. புரத உட்கொள்ளலை அதிகரிக்க நினைக்கும் நபர்கள் எருமை மாட்டு பாலை தேர்வு செய்யலாம்.
2) எருமை மாட்டு பாலுடன் பசும் பாலை ஒப்பிடும்பொழுது சராசரியாக 3.6 சதவீத கொழுப்பு அளைவைக் கொண்டுள்ளது. பசும்பாலில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் முதன்மையாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் குறைந்த அளவிலும் உள்ளது. பாலில் அதிக கொழுப்பு அளவு காணப்படுகிறது. இதில் சராசரியாக 7 முதல் 8 சதவீத கொழுப்பு அடங்கியுள்ளது. எருமை மாட்டு பாலில் அதிக அளவு சாச்சுரேட்டட் கொழுப்புகள் காணப்படுகிறது.
3)பசும்பால் மற்றும் எருமை பால் ஆகிய இரண்டிலும் கால்சியம் உள்ளது. எலும்பு ஆரோக்கியம், தசை செயல்பாடு மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு பயன் தருகிறது. ஆனாலும், எருமை மாட்டு பாலுடன் ஒப்பிடும்பொழுது பசும்பாலில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது.
4) எருமை மாட்டுப்பால் கிரீமியாக காணப்படுகிறது. பசும்பால் கொஞ்சம் இனிப்பு சுவையை கொண்டது.பசும் பால் சீஸ், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு பால் சார்ந்த ப்ராடக்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் எருமை மாட்டு பால் அதிக பாலாடைகளுடன் கிரீமியாக இருக்கிறது. இதில் உள்ள அதிக கொழுப்பு எருமை மாட்டு பாலுக்கு தனித்துவமான சுவையை சேர்க்கிறது. இதற்காகவே பலர் எருமை மாட்டு பாலை விரும்புகிறார்கள்.
5) எருமை மாட்டு பால் சிலருக்கு செரிமான சிக்கலை ஏற்படுத்தலாம். ஆனால், பசும்பால் எளிதில் செரிமானாம் ஆகக்கூடிய தன்மை கொண்டது. அதிலும் இது லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் அல்லது பால் சார்ந்த பொருட்களுக்கு உணர்திறன் கொண்ட நபர்களுக்கும் ஏற்றதாக அமைகிறது. பசும்பாலில் உள்ள குறைந்த அளவு கொழுப்பு காரணமாக இது எளிதில் ஜீரணமாகிறது.
6) எருமை மாட்டு பாலில் அதிக கொழுப்பும், புரதமும் இருப்பதால் அது வயிறு நிரம்பிய உணர்வையும், பசியை அடக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. எனினும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத நபர்கள் எருமை மாட்டு பாலை பருகிய பிறகு செரிமான பிரச்னையை சந்திக்கலாம்.
7) இந்த இரண்டு பாலிலும் எதை தேர்வு செய்ய வேண்டும் என்பது உங்களின் விருப்பம் தான். மேலும் ஊட்டச்சத்து தேவைகள் போன்றவற்றின் அடிப்படையில் அமைகிறது. உங்கள் உடல் நலனுக்கு எந்த பால் ஏற்றது என்பதை மருத்துவரின் ஆலோசனையை பெற்று பருகுதுவது சிறந்தது. பசு மாட்டு பால் பொதுவாக உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் பருகப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.