For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47-வது முறையாக நீட்டிப்பு..!! நீதிபதி அல்லி பரபரப்பு உத்தரவு..!!

Justice Alli extended Senthil Balaji's judicial custody till July 18.
04:20 PM Jul 16, 2024 IST | Chella
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47 வது முறையாக நீட்டிப்பு     நீதிபதி அல்லி பரபரப்பு உத்தரவு
Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.

Advertisement

கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தபட்ட பின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார்.

மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கபடும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளதாகவும், தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளதால் தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ள நிலையில், வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, இவ்விரு மனுக்களுக்கும் பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Read More : ’இனி டாஸ்மாக் போக தேவையில்லை’..!! ’வீடு தேடி வரும் மதுபானம்’..!! தமிழ்நாட்டில் அமலாகிறது..?

Tags :
Advertisement