For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 38-வது முறையாக நீட்டிப்பு..!! கோர்ட் அதிரடி உத்தரவு..!!

Senthil Balaji's judicial custody has been extended for the 38th time till June 14 by the Chennai District Principal Sessions Court.
05:05 PM Jun 10, 2024 IST | Chella
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 38 வது முறையாக நீட்டிப்பு     கோர்ட் அதிரடி உத்தரவு
Advertisement

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 38-வது முறையாக ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு எதிராக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையால், குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டது. 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தான், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 38-வது முறையாக ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு ஆகவுள்ளது. அதே போல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை கோரியும், அமலாக்கத்துறை தங்களுக்கு வழங்கிய ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : சொந்தமா தொழில் தொடங்க இருக்கீங்களா..? இந்த திட்டம் பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement