முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கஞ்சா வழக்கு : சவுக்கு சங்கரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

05:38 PM May 20, 2024 IST | Mari Thangam
Advertisement

கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல் துறை அறிவித்தது. சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாக எட்டாவதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கடந்த 5ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அப்போது உடன் சென்ற தேனி போலீஸார், சவுக்கு சங்கரின் காரை பரிசோதனை செய்த போது தடை செய்யப்பட்ட கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தேனி போலீஸார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, சவுக்கு சங்கரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி, தேனி மாவட்ட பி.சி.பட்டி காவல்துறை சார்பில் மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று, நீதிபதி செங்கமலசெல்வன் முன் விசாரணைக்கு வந்தது.

கோவையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் மதுரை அழைத்து வந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். முன்னதாக நீதிமன்ற உத்தரவுப்படி, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து பெண் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.

போதைப்பொருளுக்கு அடிமையான விஜய், த்ரிஷா, தனுஷ்..!! உடனே டெஸ்ட் எடுங்க..!! புதிய புயலை கிளப்பிய வீரலட்சுமி..!!

Tags :
Madurai Narcotics Special Courtsavukku sankar
Advertisement
Next Article