For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

VIRAL | 'ஓடும் இரயிலில் காதல் ஜோடி சில்மிஷம்'அதிர்ச்சியில் உடைந்த சக பயணிகள்.!!

Indian couple's PDA on train caught on camera (Photo Credits: X) Viral video captures a couple's PDA in the sleeper coach of an Indian train, internet reacts.
08:28 PM Jun 12, 2024 IST | Mari Thangam
viral    ஓடும் இரயிலில் காதல் ஜோடி சில்மிஷம் அதிர்ச்சியில் உடைந்த சக பயணிகள்
Advertisement

கடந்த இரண்டு மாதங்களில், பிடிஏவில் ஈடுபடும் தம்பதிகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

இரயில்களில் தம்பதிகளின் பிடிஏ செயல்கள் தற்போது இந்திய ரயில்வேயிலும் ஊடுருவியுள்ளது. சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் காணொளியில், ரயிலில் ஒரு ஜோடி வெளிப்படையாக அரவணைத்த படி ஸ்லீப்பர் கோச்சில் செய்யும் அட்டூலியம் குழந்தைகள் உட்பட சக பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சியை பதிவு செய்த பெண் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் வைரலாகி வருகிறது.

இப்போது வைரலான காட்சிகளில், ஸ்லீப்பர் கோச்சில் ஒரு இருக்கையில் இந்த ஜோடி படுத்திருப்பதை காணலாம். டிக்கெட் பரிசோதகர் ஒருவருடன் சிறிது நேரம் உரையாடிய போதிலும், அவர்கள் மற்ற பயணிகளின் இருப்பைக் கண்டு துவண்டு போகாமல், பொது இடத்தில் அரவணைத்துக் கொண்டிருந்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பலர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். பலர் பயணம் செய்யும் இரயில் இப்படி செய்வது சரியா? என்றும், இது OYO-வா அல்லது பொது போக்குவரத்தா எனவும் பலர் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த ஜோடியை அவர்களின் அனுமதியின்றி படம் எடுத்ததற்காக பலர் அவரை விமர்சித்தனர். "நீ ஏன் அதை செய்தாய்? வீடியோவைப் படமெடுப்பதற்கு முன்பு அவர்களின் அனுமதியைப் பெற்றீர்களா, ”என்று மற்றொரு பயனர் கேட்டார்.

ஒப்புதல் இல்லாமல் ஒருவரின் தனிப்பட்ட வீடியோவை பதிவு செய்வது குற்றம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இந்தக் குற்றத்திற்கான தண்டனை இந்திய தண்டனைச் சட்டத்தின் 354 (சி) பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது எனவும் மற்றும் ஒரு பயனர் குறிப்பிட்டார்.

பொது போக்குவரத்தில் இதுபோன்ற பிடிஏ செயல்கள் பிடிபடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, நியூயார்க்கில் இருந்து சென்ற விமானத்தின் நான்கு மணிநேர விமான பயனத்தில் தம்பதிகளில் பிடிஏ செயல்களின் சங்கடமான அனுபவத்தைப் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த சம்பவம் இணையத்தில் வைரலானது.

Read more ; குவைத் தீ விபத்தில் 51 பேர் பலி! கட்டிடத்தின் உரிமையாளர் ‘கே.ஜி.ஆபிரகாம்’ யார்?

Tags :
Advertisement