புதிய உறவுக்குள் நுழைகிறீர்களா..? அப்படினா மறக்காம இதை பண்ணுங்க..!!
புதிய உறவுகள் நுழைவதாக இருந்தாலும் சரி அல்லது பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்களாக இருந்தாலும் சரி பாதுகாப்பான எதிர்காலத்தை அமைப்பதற்கு அத்தியாவசியமான ஒரு சில பொருளாதார ஆவணங்களை வைத்திருப்பது முக்கியம். அந்த வகையில், தம்பதிகள் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசிய பொருளாதார டாக்குமெண்ட்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜாயிண்ட் பேங்க் அக்கவுண்ட் ஒப்பந்தம் :
பெரும்பாலான தம்பதிகள் ஜாயிண்ட் பேங்க் அக்கவுண்ட் திறப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். வீட்டு செலவுகள் மற்றும் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு இந்த அக்கவுண்ட்டை பயன்படுத்துவர். ஒவ்வொருவரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் உட்பட விதிகள் மற்றும் நிபந்தனைகளை குறிப்பிடும் ஜாயிண்ட் பேங்க் அக்கவுண்ட் ஒப்பந்தத்தை தம்பதிகள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். இது இருவருக்குள் எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
திருமண சான்றிதழ் :
இந்தியாவில் தம்பதிகள் திருமண சான்றிதழ் வைத்திருப்பது அவசியம். இது உங்களது திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கிறது மற்றும் உங்களுடைய திருமணத்திற்கான ஒரு ஒப்புதல் ஆவணமாக செயல்படுகிறது. ஜாயிண்ட் லோன், இன்சூரன்ஸ், ஜாயிண்ட் அக்கவுண்ட் போன்றவற்றிற்கு இந்த டாக்குமெண்ட் அவசியம்.
உயில் :
உயில் போன்ற முக்கியமான டாக்குமெண்ட்களை வைத்துக் கொள்வது அவசியம். ஒருவேளை நீங்கள் இறந்து போகும் பட்சத்தில் உங்களது சொத்துக்கள் மற்றும் பணம் யாருக்கு சேரும் என்பதை இந்த சட்டப்பூர்வமான ஆவணம் குறிப்பிடுகிறது.
சொத்து டாக்குமெண்ட்கள் :
தம்பதியாக நீங்கள் இருவரும் ஒரு சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கும் பட்சத்தில் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரியாக பராமரிக்க வேண்டும். விற்பனை ஒப்பந்த பத்திரம், லோன் டாக்குமெண்ட்கள், பதிவு சான்றிதழ்கள் போன்றவை இதில் அடங்கும். இந்த டாக்குமெண்ட்கள் உரிமையை பறைசாற்றுவதற்கு மட்டுமல்லாமல் சொத்து மாற்றம், லோன் மற்றும் சட்டப்பூர்வமான விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் :
இன்றைய நிச்சயமில்லா உலகில் தம்பதிகளுக்கு இன்சூரன்ஸ் பாலிசி பொருளாதார திட்டமிடலுக்கான ஒரு முக்கியமான அங்கமாக அமைகிறது. தனித்தனி அல்லது ஜாயிண்ட் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் வைத்திருப்பது உங்கள் இறப்பிற்கு பிறகு உங்கள் வாழ்க்கை துணையின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்கிறது.
தம்பதிகளாக இந்த காதலர் தினத்தில் பொருளாதார சம்பந்தப்பட்ட வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உங்களது பொருளாதார எதிர்காலத்தை வலிமையாக்குவதற்கான முயற்சியை எடுங்கள்.
Read More : உடலுறவு வைத்துக் கொள்ளும்போது இந்த விஷயத்தை மறந்துறாதீங்க..!! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..?