For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாட்டு சர்க்கரை இந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்குமா..? கண்டிப்பா நீங்களும் டிரை பண்ணுங்க..!!

People who want to lose weight can find it helpful to take native sugar.
05:30 AM Aug 08, 2024 IST | Chella
நாட்டு சர்க்கரை இந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்குமா    கண்டிப்பா நீங்களும் டிரை பண்ணுங்க
Advertisement

வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை இரண்டுமே நம் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டுமே கரும்பில் இருந்து தான் வருகிறது என்றாலும் இவற்றை தயாரிக்கும் விதம் மாறுபடுகிறது. சர்க்கரைக்கு இயற்கையாக மணமில்லை. ஆனால், நாட்டுச் சக்கரையில் மணம் உண்டு. என்னதான் இரண்டுமே கரும்பில் இருந்து வந்தாலும், மருத்துவ வல்லுநர்கள் பலரும் இன்று வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

Advertisement

நாட்டு சர்க்கரையில் வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. இதில் மெக்னீசியம், காசியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்கள் உள்ளன. இது ரத்தசோகை உள்ளவர்கள் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. இதுவே வெள்ளை சர்க்கரையில் இனிப்பு தன்மை மட்டுமே உள்ளது. இதில் ஊட்டச்சத்துக்கள் கிடையாது. வெள்ளை சர்க்கரை உடலில் சீக்கிரம் கரைந்துவிடுகிறது. மேலும், அவை கலோரிகள் நிறைந்தவை. இதனால் சர்க்கரை நோய் வருவது மட்டுமின்றி, உடல் எடையையும் அதிகரிக்க செய்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நாட்டு சர்க்கரை எடுத்துகொள்வது உதவியாக இருக்கும்.

மேலும், ஆஸ்துமா போன்ற மூச்சு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் இது நல்லது. வெள்ளை சர்க்கரையால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது போல இது அதிகரிப்பதில்லை. நாட்டு சர்க்கரை கருப்பையின் தசைகளை தளர்வாக்கும், வலியில்லா மாதவிடாய்க்கு வழிவகுக்கும். எனவே, மாதவிடாய் சமயத்தில் நாட்டுச் சர்க்கரை சாப்பிட்டால் நல்லது. மேலும், நாட்டு சர்க்கரை சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி கூடுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

உணவுக்குப் பிறகு ஒரு துண்டு வெல்லத்தை உட்கொள்வது செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. நாட்டு சர்க்கரை நல்லது என்பதற்காக அதையும் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உங்கள் உணவில் சர்க்கரையைச் சேர்ப்பது அதிகப்படியான கலோரிகளைச் சேர்ப்பதற்கு சமம் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

Read More : தினமும் காலையில் அலாரம் வைத்து எழுபவரா நீங்கள்..? இவ்வளவு பிரச்சனைகள் வருமா..? எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

Tags :
Advertisement