Seeman | ”ஊழல் செய்தவர்கள் தேர்தல் போட்டியிட தடை”..!! நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு..!!
லோக்சபா தேர்தலுக்கான 84 பக்க தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார். மொத்தம் 32 தலைப்புகளில் இந்த தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தல் அறிக்கையின் தொடக்கத்தில் பாஜகவும், காங்கிரஸும் ஒன்று என்கிற விமர்சனம் இடம் பெற்றுள்ளது. அதேபோல மாநில உரிமைகளை திமுகவும், அதிமுகவும் அடகு வைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தேசிய இனங்களின் நலன்கள், உரிமைகள் அடிப்படையில் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும் என்கிறது நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
* மக்களால் மட்டுமே குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
* ராஜ்யசபா எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவிகள் வழங்கக் கூடாது
* ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்
* மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சாசனத்தின் 356- வது பிரிவு நீக்கம்
* 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு லோக்சபா தொகுதி என மறுசீரமைப்பு செய்ய வேண்டும்
* சின்னங்கள் இல்லாமல் எண்கள் ஒதுக்கீடு செய்து தேர்தல் நடத்த வேண்டும்
* வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு தடை விதித்து வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும்
* இடைத்தேர்தல் முறையையே ஒழிக்க வேண்டும்
* ஊழல் செய்தவர்கள் தேர்தல் போட்டியிட தடை விதிக்க வேண்டும்
* ஒரு நபர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்
* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை. சிறை கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும்.
* மற்றொரு அரசியல் கட்சியின் சின்னத்தில் போட்டியிட தடை
* மாநில உயர்நீதிமன்றங்களில் மண்ணின் மைந்தர்களே நீதிபதிகள்
* காஷ்மீருக்கான 370-வது பிரிவு சிறப்புரிமை அனைத்து தேசிய இனங்களுக்கும் வழங்க வேண்டும்
* தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்
* கச்சத்தீவு ஒப்பந்தம் ரத்து
* வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்க எதிர்ப்பு
* சிஏஏ, என்பிஆர், என்.ஆர்.சி, பொதுசிவில் சட்டங்களுக்கு எதிர்ப்பு
என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் சீமான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
Read More : ”யாராவது எழுந்து போனா ரத்தம் கக்கி சாவீங்க”..!! சாபம்விட்ட செல்லூர் ராஜூ..!! அதிர்ந்துபோன அதிமுகவினர்..!!