உஷார் மக்களே.. தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா..!! ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா?
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. ஒரே நாளில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 நாட்களில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அடுத்த 3 மாதத்துக்குள் ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவத் தொடங்கியது. தொடர்ந்து, இந்தியாவிலும் கொரோனா வேகமாகப் பரவியது. இதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு, பயணத்தில் கட்டுப்பாடுகள், தனி வார்டுகள், மருத்துவக் கட்டமைப்பு என பல வழிவகைகள் செய்யப்பட்டன.
இதனால் இந்தியாவில் ஐந்து இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்திற்கு வந்தது. இதனிடையே, கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளும் இந்திய மக்களுக்கு மத்திய அரசால் இலவசமாக போடப்பட்டது. பல கட்டங்களுக்கு பிறகு கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், கடந்த 12 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, கடந்த அக்டோபர் 11ஆம் தேதி சென்னை, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் 67 பேரிடம் சோதனை மேற்கொண்டதில், ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இருப்பினும், இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், கொரோனா தொற்று கட்டுக்குள்ளே உள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Read more ; 43 நாட்களுக்கு பிறகு சாம்சங் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்..!!