சமையலில் உப்பு, காரம் அதிகமாகி விட்டதா.! இந்த விஷயத்தை பண்ணுங்க போதும்.!?
நாம் தினமும் வீட்டில் சமைத்து உண்ணும் உணவு சத்தானதாகவும், சுவையானதாகவும் இருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் புளி, காரம், உப்பு போன்ற சுவைகள் சரியான அளவு இருக்க வேண்டும். ஏதாவது ஒரு சுவை அதிகமாகி விட்டாலும் சமையல் வீணாகிவிடும்.
அவ்வாறு சமைக்கும் போது உப்பு, புளி, காரம் போன்ற சுவைகள் அதிகமாகிவிட்டால் எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க?
1. சட்னியில் உப்பு சுவை அதிகமாகிவிட்டால் என்ன செய்வது? காரச் சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்ற அனைத்து வகையான சட்னிகளிலும் உப்பு சுவை அதிகமாகிவிட்டால் பொட்டுக்கடலையை சிறிது மாவாக அரைத்து கலந்து விட்டால் உப்பின் சுவை குறைந்து சட்னி சுவையாக இருக்கும்.
2. பிரியாணியில் காரம் மற்றும் உப்பு சுவை அதிகமாகி விட்டால் என்ன செய்வது?பிரியாணியில் காரம் அதிகரித்து விட்டால் சிறிது உலர் திராட்சையை நெய்யில் வறுத்து அதனை பிரியாணியுடன் சேர்க்கலாம் அல்லது எலுமிச்சை சாறு பிரியாணியில் பிழிந்து விட்டால் காரம் குறையும்.
உப்பு சுவை அதிகமாகி விட்டால் பெரிய வெங்காயத்தை எண்ணெயில் வறுத்து பிரியாணியின் மேல் தூவி விட வேண்டும். இதனை செய்வதன் மூலம் உப்பின் கரிப்பு தன்மை நீங்கும்.
குழம்பு வகைகளில் உப்பு காரம் அதிகரித்து விட்டால் என்ன செய்யலாம்?
குழம்பில் காரம் அதிகரித்து விட்டால் தேங்காய் பால் சிறிது சேர்த்து கொதிக்க விட்டு இறக்கலாம் மற்றும் சிறிதளவு தயிர் சேர்க்கலாம்.
உப்பு சுவை அதிகரித்து விட்டால் உருளைக்கிழங்கு வேகவைத்து குழம்பில் சேர்த்தால் அதிகப்படியான உப்பு சுவை நீங்கும்.