பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து..!! நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஜெயில் தண்டனை உறுதி..!! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு..!!
நடிகர் எஸ்.வி. சேகருக்கு வழங்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளா்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்தை எஸ்.வி.சேகா் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளா்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளா் மிதாா் மொய்தின் காவல் துறையில் புகாா் அளித்திருந்தார்.
அதன் பேரில், நடிகா் எஸ்.வி.சேகா் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், நடிகா் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையடுத்து, அபராதத் தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிா்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகா் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று, தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : இந்தியாவின் தொடர் தோல்விகளுக்கு காரணம் ரோகித், கம்பீரா..? அஸ்வின் ஓய்வுக்கும் இவர்தான் காரணமா..? விசாரணை நடத்தும் பிசிசிஐ..!!