மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமின்.!! - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
போதைப்பொருள் வழக்கில் கைதான மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகானுக்கு நிபந்தனை ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜே.ஜே. நகர் போலீசார் தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் கஞ்சா மற்றும் கோகைன், கஞ்சா மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. போதை பொருள் ரெடிட் என்ற அஃப் மூலமாக இவர்கள் வாங்கி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் முக்கிய நபரான கார்த்திகேயனை விசாரித்தபோது, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகானுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மன்சூர் அலிகானின் மகன் அவரது நண்பர்கள் என மொத்தம் 7 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் போதைப்பொருள் வாங்கியுள்ளார்களா..? அல்லது போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார்களா..? என பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் உள்பட அவரது நண்பர்கள் 3 பேர் என 4 பேர் போதைப்பொருளை பயன்படுத்தியிருப்பதும், வாங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்து செய்தனர். இந்த நிலையில் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகானின் ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகானுக்கு நிபந்தனை ஜாமின் வழங்க உத்தரவிட்டார். மேலும், ஜே. ஜே நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
Read more ; இதய ஆரோக்கியத்திற்கு கொழுப்பு அவசியம்.. ஆனா இதை செய்தால் தான் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்…