ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக கட்டுப்படுத்தும் சித்த வைத்திய மருந்து.!?
தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இந்த சர்க்கரை நோய் உணவு பழக்கங்களினாலும், பரம்பரையின் ஜீன்காரணமாகவும் நம் உடலில் ஏற்படுகிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளின் மூலம் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்கு பதிலாக நம் உணவில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் சித்த வைத்திய முறையை பின்பற்றி வந்தால் சர்க்கரை நோய் உடனே கட்டுக்குள் வந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். இந்த சித்த வைத்தியம் மருந்தை எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?
தேவையான பொருட்கள்:
வெந்தயம் 250 கிராம், உளுந்து 100 கிராம், கசகசா 250 கிராம், கேழ்வரகு 250 கிராம், கோதுமை 250 கிராம், சிவப்பு அவல் 250 கிராம், சீரகம் 25 கிராம், ஓமம் 25 கிராம், சோம்பு 25 கிராம், சுண்டைவற்றல் 50 கிராம்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெந்தயம், கோதுமை, கேழ்வரகு மூன்றையும் நன்றாக 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு வடிகட்டி ஒரு துணியில் கட்டி வைத்து முளைகட்டி வைத்து எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள பொருட்களை ஒரு கடாயில் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் முதலில் முளைகட்டிய பயிர்களை நன்றாக அரைத்து பின்பு வறுத்தெடுத்து வைத்த பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனை கூழ் அல்லது களி போன்று செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு உடனடியாக குறையும் என்று சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.