strike: நவம்பர் 6ஆம் தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்..!
சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு இயக்கப்படும் கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகளை நவம்பர் 6ஆம் தேதி முதல் வெளி நுரைத்தும என அறிவிப்பு.
இதுதொடர்பாக மோட்டார் வாகன சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 40 சதவீத காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும், வடசென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்களில் லாரிகளை பார்க்கிங் செய்வதற்கான டெர்மினல் அமைத்து கொடுக்க வேண்டும், ஆன்லைன் முறையில் லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 6ஆம் தேதி முதல் சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் ஏற்றுமதி இறக்குமதி பணிகளுக்காக பயன்படுத்தப்படும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.