கணவன், மனைவி முத்தமிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..
அன்பின் வெளிப்பாடுகளில் முக்கியமான ஒன்று என்றால் அது முத்தம் தான். திருமண உறவில் முத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. முத்தம் கொடுப்பதால் திருமண வாழ்வில் சண்டைகளை குறைத்து தம்பதிகளிடையே நெருக்கத்தை அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல், முத்தமிடுவதில் சில ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். ஆம், முத்தம் கொடுப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும், இதயம் ஆரோக்கியமாக இருக்கும், கலோரிகளை எரிக்க உதவும், மகிழ்ச்சி அதிகரிப்பதால் ரத்த அழுத்தம் குறையும், தசைகளை வலுப்படும். அதே சமையம், திருமணமான தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தினால், உறவில் பல எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். ஆம், கணவன் மனைவி இடையே உணர்வுரீதியான இடைவெளி ஏற்படும். முத்தம், உடல்ரீதியான செயல்பாடு மட்டும் இல்லாமல், அது தங்கள் துணை மீதுள்ள அன்பு மற்றும் உணர்வுபூர்வமான தொடர்பின் வெளிப்பாடாகும்.
இதனால் தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தும் போது, உணர்வுபூர்வமான நெருக்கம் குறைந்து, தவறான புரிதல்கள் ஏற்படும். தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தும்போது, அது அவர்களின் உடல் நெருக்கத்தையும் குறைத்துவிடும். தில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஆம், முத்தமிடுவதை நிறுத்தும் போது அரவணைப்பு, கட்டிப்பிடித்தல் மற்றும் பாலியல் செயல்பாடு போன்றவை முற்றிலும் குறையும். இதன் விளைவாக உடல் ஆசை மற்றும் அரவனைப்பிற்காக வேறொருவரிடம் அதை எதிரபார்க்க வைக்கும். கள்ளக்காதல் ஏற்பட இதுவே முக்கிய காரணமாக அமைகிறது. ஆம், தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தும்போது, ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைந்து, இருவரும் பேசிக்கொள்வது குறைந்து விடும். அதனால் யாரிடமாவது தனது விருப்பத்தையும், ஏக்கத்தையும் பகிர்ந்து விட மாட்டோமா என்ற எண்ணம் தவறான பாதைக்கு நம்மை மாற்றி விடும்.
முத்தம் உங்கள் துணைக்கு நேசிக்கப்படும் உணர்வையும் மற்றும் கவர்ச்சிகரமான உணர்வை வழங்குகிறது, இதனால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் முத்தமிடுவதை நிறுத்தினால் தங்கள் தோற்றம் பற்றியும், கவர்ச்சி பற்றியும் சந்தேகம் ஏற்படும். மேலும், தங்கள் துணை துரோகம் செய்வதற்கான சூழல் உருவாகும்.
Read more: உங்கள் குழந்தைகள் Genius-ஆக இருக்க வேண்டுமா? அப்போ இந்த மீனை கண்டிப்பா கொடுங்க..