தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர்கள் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டை பொறுத்தவரை பொது மற்றும் அரசு விடுமுறைகளை தவிர்த்து ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோவில் பண்டிகை காலங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதன்படி, தற்போது ஆடி மாதம் என்பதால் தமிழகத்தின் பல ஊர்களில் பண்டிகைகளும், சிறப்பு நாட்களும் வருவதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜூலை 29ஆம் தேதி ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திற்கு ராஜராஜ சோழன் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சேலம் மாவட்டத்திற்கு ஆடிப்பெருக்கு மற்றும் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! நல்ல சம்பளத்தில் போஸ்ட் ஆபீஸில் வேலை..!!