பாஜக கோட்டையை தட்டி தூக்கும் காங்கிரஸ்.! பரபரப்பான புதிய கருத்துக்கணிப்பு.!
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் சில மாநில சட்டசபை தேர்தல்களும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய கோட்டையை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தலைநகர் டெல்லிக்கு அருகே அமைந்திருக்கும் ஹரியான மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. சிறிய மாநிலமான ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல்கள் நடைபெற இருக்கிறது. தற்போது பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளுடன் இந்த மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைத்த பாஜக 2019-ல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கிறது .
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்கள் தொடர்பான கருத்துக்கணிப்புகளை ஜன்மத் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த அமைப்பின் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி 48 முதல் 50 இடங்களை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் பாரதிய ஜனதா கட்சிக்கு 30 முதல் 33 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று வெற்றி பெற்ற பாஜகவிற்கு இந்த முடிவுகள் சற்று பின்னடைவாகவே அமைந்திருக்கிறது.