முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"நாட்டின் சொத்துக்களை காங்கிரஸ் முஸ்லீம்களிடம் ஒப்படைக்கும்" - மோடி

04:13 PM Apr 22, 2024 IST | Mari Thangam
Advertisement

நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூறியதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

Advertisement

இந்தியாவில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ஓரிரு இடங்களில் வன்முறை அரங்கேறிய நிலையில், அதைத் தவிர பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது.இதற்கிடையே அடுத்த கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் பிரச்சாரம் எல்லா இடங்களிலும் அனல் பறக்கிறது.

இரண்டாம் கட்ட தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் நடக்கும் நிலையில், ராஜஸ்தானிலும் நடக்கிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. அங்கிருந்து மொத்தம் 25 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாவார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,​​தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா.

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது.” எனக் கூறியிருந்தார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
#Bjp#indiaCONGRESSelection2024PM Modi
Advertisement
Next Article