For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

PM Modi | "மக்களின் சொத்துக்களை அபகரிக்கவே காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது…" பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

05:37 PM Apr 26, 2024 IST | Mohisha
pm modi    மக்களின் சொத்துக்களை அபகரிக்கவே காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது…  பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Advertisement

PM Modi: 18-வது பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 12 தொகுதிகளில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளா கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

Advertisement

இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அடுத்தடுத்து வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருவதால் அரசியல் கட்சிகள் தீவிரமான களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டிருக்கிறது. இந்த இலக்கை அடைவதற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தங்களது தேர்தல் பரப்புரையில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களின் சொத்துக்களை அபகரிக்கும் என தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி(PM Modi) காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் நிலங்களை கணக்கெடுத்து வாரிசு வரி விதிக்க முயற்சிக்கிறது என குற்றம் சாட்டி இருக்கிறார்.

மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களில் பாதியை பிடுங்கி விடுவார்கள் என தெரிவித்த பிரதமர் இதன் காரணமாக வரும் காலத்தில் பெற்றோர்களின் சொத்துக்கள் பிள்ளைகளுக்கு கிடைக்காதவாறு காங்கிரஸ் சட்டம் இயற்ற முயற்சிக்கிறது எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார். கடந்த சில தினங்களாகவே பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஒருவர் மீது மற்றொருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More: MS Dhoni | ” மேட்ச் நடக்கிற நாள்ல தோனி லேட்டா தான் எழும்புவார்; அதுக்கும் ஒரு காரணம் இருக்கு…” ருத்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயம்.!!

Advertisement