PM MODI | "தீவிரவாதிகளுக்காக கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்…" கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் மோடி குற்றச்சாட்டு.!!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் 190 தொகுதிகளில் முடிவடைந்து இருக்கிறது. இந்நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே மாதம் 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பாராளுமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 26 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மீதி இருக்கும் 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி தீவிரவாதிகள் இறந்தால் காங்கிரஸ் கட்சி கண்ணீர் வடிக்கும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். மேலும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகுதான் குண்டு வெடிப்பு நிகழ்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
குண்டு வெடித்ததை சிலிண்டர் வெடித்ததாக காங்கிரஸ் அரசு கூடுகிறது என குற்றம் சாட்டிய பிரதமர் மோடி தீவிரவாதிகளுக்காக கண்ணீர் வடிப்பது தான் காங்கிரஸ் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் டெல்லியில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்த போதும் காங்கிரஸ் கட்சி நீலி கண்ணீர் வடித்ததாக தெரிவித்துள்ளார்.