ஏய் எப்புட்றா .! 2024 தேர்தல் குழுவில் "கார்த்தி சிதம்பரம்" காங்கிரஸ் கமிட்டி அதிரடி.!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதி குறித்த அதிகாரம் பூர்வ அறிவிப்பு வருகின்ற மார்ச் மாதம் இரண்டாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் இப்போது இருந்தே தேர்தல் பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கி இருக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைநகர் டெல்லியில் சுவர் விளம்பரங்களின் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியது . அந்தக் கட்சியின் தேசிய தலைவர் நட்டா சுவர் விளம்பர பிரச்சாரத்தை தொடங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கிறது. மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான 31 பேர் கொண்ட தமிழ்நாடு தேர்தல் குழுவையும் காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.எஸ் அழகிரி இந்த தேர்தல் குழுவிற்கும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர்கள் பா.சிதம்பரம் மற்றும் மணிசங்கர் அய்யர் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர மூத்த உறுப்பினர்களான குமரி ஆனந்தன் செல்வப் பெருந்தகை ஆகியோரோடு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கார்த்தி சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்த நிலையில் தேர்தல் குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.