Election | "அறிவாலயத்தின் ஒட்டு தின்னையாக மாறிய காங்கிரஸ்"… அர்ஜுன் சம்பத் காட்டமான விமர்சனம்.!!
Election: அறிவாலயத்தின் ஒட்டு தின்னையாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியிருக்கிறார் .
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்(Election) வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து 18-வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமாடி வருகிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பாமக, அமமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பொது தேர்தலை சந்திக்கிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வலதுசாரி அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கும்பகோணம் பாராளுமன்ற தொகுதியில் பாஜகவின் கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் ஸ்டாலினை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். இப்போது காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார் அர்ஜுன் சம்பத்.
இது தொடர்பாக பேசிய அவர் திமுகவின் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தலுக்கு முன்பு ஒன்று பேசுவதாகவும் தேர்தல் முடிந்த பின்பு வேறொன்று பேசுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை திமுகவில் பினாமியாக செயல்படுகிறார் என குற்றம் சாட்டி உள்ளார். மேலும் காங்கிரஸ் என்ற கட்சியே அறிவாலயத்தின் ஒட்டு திண்ணையாக செயல்படுகிறது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அர்ஜுன் சம்பத்.