For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கன்பியூசன் ஆன தேர்தல் ஆணையம்…! 3 வது முறையாக மாற்றம்..! இப்போது 69.71 சதவீதம்..!

06:20 AM Apr 22, 2024 IST | Baskar
கன்பியூசன் ஆன தேர்தல் ஆணையம்…  3 வது முறையாக மாற்றம்    இப்போது 69 71 சதவீதம்
Advertisement

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதத்தை 3வது முறையாக இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி கூறியுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 மக்களவைத் தொகுதி என 40 இடங்களுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து இரவில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் சனிக்கிழமை வாக்கு சதவீதம் மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அன்று நள்ளிரவில் வெளியான டேட்டாவில் 69.46% வாக்குகள் மட்டுமே பதிவானது என்று கூறப்பட்டது.

பொதுவாக இறுதியாக வெளியிடப்படும் வாக்கு சதவீதம் என்பது ஒன்று முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்க தான் செய்யும். ஆனால் தமிழகத்தில் இந்த முறை சுமார் 3 சதவீதம் வரை குறைந்தது. இதையடுத்து குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை மாலையில் தேர்தல் ஆணையம் தமிழக வாக்கு சதவீதம் தொடர்பான விபரங்களை அறிக்கையாக வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகள் பதிவானதாக தெரிவித்தது. இந்நிலையில் தான் தற்போது வாக்கு சதவீத அளவை இந்திய தேர்தல் ஆணையம் 3வது முறையாக மாற்றி அறிவித்துள்ளது. இப்படி வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் மாற்றி மாற்றி அறிவித்துள்ளது, அரசியல் கட்சிகளை மட்டுமல்ல வாக்காளர்களையும் குழப்பமடைய செய்துள்ளது.

முதலில் 72.09 சதவீதம், 2வது 69.46 சதவீதம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 69.71 சதவீதம் என 3வது முறையாக மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொகுதி வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. குறைந்தபட்சம் என்றால் மத்திய சென்னையில் 53.96 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது.

மாவட்டம் வாரியாக:
திருவள்ளூர் – 68.59%
வடசென்னை – 60.11%
தென் சென்னை – 54.17%
மத்திய சென்னை – 53.96%
ஸ்ரீபெரும்புதூர் – 60.25%
காஞ்சிபுரம் – 71.68%
அரக்கோணம் – 74.19%
வேலூர் – 73.53%
கிருஷ்ணகிரி – 71.50%
தர்மபுரி – 81.20%
திருவண்ணாமலை – 74.24%
ஆரணி – 75.76%
விழுப்புரம் – 76.52%
கள்ளக்குறிச்சி – 79.21%
சேலம் – 78.16%
நாமக்கல் – 78.21%
ஈரோடு – 70.59%
திருப்பூர் – 70.62%
நீலகிரி – 70.95%
கோயம்புத்தூர் – 64.89%
பொள்ளாச்சி – 70.41%
திண்டுக்கல் – 71.14%
கரூர் – 78.70%
திருச்சிராப்பள்ளி – 67.51%
பெரம்பலூர் – 77.43
கடலூர் – 72.57%
சிதம்பரம் – 76.37%
மயிலாடுதுறை – 70.09%
நாகப்பட்டினம் – 71.94%
தஞ்சாவூர் – 68.27%
சிவகங்கை – 64.26%
மதுரை – 62.04%
தேனி – 69.84%
விருதுநகர் – 70.22%
ராமநாதபுரம் – 68.19
தூத்துக்குடி – 66.88%
தென்காசி – 67.65%
திருநெல்வேல் – 64.10%
கன்னியாகுமரி – 65.44%

Read More: ‘தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்’ வலியால் துடித்த சிறுவனின் வீடியோவை பகிர்ந்து மோகன் ஜி வேண்டுகோள்!

Tags :
Advertisement