”பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது உறுதி”..!! விஜய் நேரில் சென்றுவந்த நிலையில் தமிழ்நாடு அரசு பரபரப்பு அறிக்கை..!!
பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியாகத் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. எனவே, மக்களை பாதிக்காத வகையில், இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் கொடுத்துள்ளது. நடிகர் விஜய் பரந்தூர் சென்று வந்த நிலையில், இப்படியொரு விளக்கத்தை தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பரந்தூர் விமான நிலையத்தால், தொழில், மருத்துவம் போன்ற துறைகள் பெரியளவில் வளர்ச்சி பெறும்.
இதனால், மக்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். பண்ணூரில் 1,546 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், பரந்தூரில் 1,005 குடும்பங்கள் மட்டுமே வசிப்பதால், விமானநிலைய செயல்பாடுகளுக்கு தடைகள் பரந்தூரில் குறைவாக உள்ளன. இதன் அடிப்படையில் தான், விமானப் போக்குவரத்து ஆணையத்தினால் சென்னை மாநகரின் 2-வது விமான நிலையத்தை அமைக்க பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது” என்று விளக்கம் கொடுத்துள்ளது.
ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் 910 நாட்களை கடந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை பரந்தூர் போராட்டக் குழுவினரை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்தித்து பேசினார். அப்போது பேசிய விஜய், :விவசாயிகளுக்கு நான் என்றும் துணை நிற்பேன். மதுரை டங்ஸ்டன் நிலைப்பாட்டை பரந்தூர் விவகாரத்தில் அரசு ஏன் எடுக்கவில்லை..? விமான நிலையத்தை தாண்டி அவர்களுக்கு ஏதோ லாபம் உள்ளதாக பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார். இந்நிலையில் தான், தமிழ்நாடு அரசு இப்படியொரு விளக்கத்தை கொடுத்துள்ளது.
Read More : இது தெரியாம இனி ”மீல் மேக்கர்” சாப்பிடாதீங்க..!! தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், கர்ப்பிணிகளே உஷார்..!!