முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

47,634 கி.மீ வேகத்தில் வருது..!! பூமியின் மீது மோதினால் என்ன ஆகும்..? இன்று நடக்கப்போகும் மிகப்பெரிய சம்பவம்..!! எச்சரிக்கும் நாசா..!!

The US space agency NASA has announced that two large asteroids will pass by Earth today (December 21) at 3.03 pm.
08:26 AM Dec 21, 2024 IST | Chella
Advertisement

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, இன்று (டிசம்பர் 21) மாலை 3.03 மணிக்கு மிகப்பெரிய ஆஸ்டிராய்டு எனப்படும் 2 கோள்கள் பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவை பூமிக்கு அருகே எந்தவொரு பாதிப்பும் இன்றி கடந்து செல்லும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த கோள்களில் சிறிதாக சுமார் 50 அடி சுற்றளவில், ஒரு சாதாரன வீட்டின் அளவை ஒத்து இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மணிக்கு சுமார் 47,634 கி.மீ. வேகத்தில், இன்று மாலை 3.03 மணிக்கு சுமார் 1,06,000 கி.மீ தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு 2024 XQ4 எனும் அடையாளப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னதாக பூமியைக் கடக்கவிருக்கும் 2024 XN15 (எக்ஸ்என்) எனும் அடையாளப் பெயர் சூட்டப்பட்டிருந்தன. இந்த சிறுகோளானது 2024 XQ4 (எக்ஸ்க்யூ) ஐ விட பெரியதாக 60 அடி சுற்றளவில் மணிக்கு 35,051 கி.மீ. வேகத்தில், இந்திய நேரப்படி டிசம்பர் 21ஆம் தேதி மாலை 2.38 மணியளவில், சுமார் 37,80,000 கி.மீ. தொலைவில் பூமியை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாசா 150 மீ. சுற்றளவுக்கும் மேல் 7.5 மில்லியன் கி.மீ. தொலைவுக்குள் பூமியைக் கடந்து செல்லும் பொருட்களை அபாயகரமான பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் தற்போது கடக்கவிருக்கும் 2024 XN15 மற்றும் 2024 XQ4 ஆகிய இரண்டு கோள்களும் இந்த வரம்புக்குள் அடங்கலாம் எனத் தெரிகிறது.

Read More : மாதம் ரூ.40,000 சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..? விவரம் உள்ளே..!!

Tags :
நாசாபூமிவிண்வெளி ஆராய்ச்சி மையம்
Advertisement
Next Article