படுதோல்வி..!! கடுப்பில் கிரிக்கெட் வாரியத்தை கலைத்த இலங்கை அரசு..!! வீரர்கள் அதிர்ச்சி..!!
இலங்கை அணியின் தொடர் மோசமான தோல்விகளை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களில் இலங்கை வீரர்கள் சுருண்டதுடன் 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக 50 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 300 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தொடர் மோசமான தோல்விகள் குறித்து இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர், கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் ஆகியோரிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு வருகிறது.
இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மோசமான தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு அதிரடியாக கலைத்துள்ளது. மேலும் அதற்கு மாற்றாக 1996இல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜூன ரணதுங்கா தலைமையில், ஓய்வு பெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய இடைக்கால குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.