For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்...! விசாரணையை தொடங்கிய சிறப்பு குழு...!

College student raped...! Special team begins investigation
05:40 AM Dec 30, 2024 IST | Vignesh
கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்      விசாரணையை தொடங்கிய சிறப்பு குழு
Advertisement

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர்.

Advertisement

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். நீதிமன்றம் இதை விசாரித்து, தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு சராமரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

மேலும் காவல் துறையின் தவறால் எஃப்ஐஆர் வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை தமிழக அரசு வழங்க உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர்கள் சினேக பிரியா (சென்னை அண்ணா நகர்), ஐமான் ஜமால் (ஆவடி), பிருந்தா (சேலம்) ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் பதிவு செய்த எஃப்ஐஆர், கைதான ஞானசேகரன் பற்றிய விவரங்கள், புலனாய்வு விசாரணை விவரங்கள் ஆகியவை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று விசாரணையை தொடங்கினர். ஞானசேகரனின் செல்போனில் இருந்த வீடியோக்கள், எஃப்ஐஆர் தகவல் கசிந்தது, அதை 14 பேர் பார்வையிட்டது ஆகியவை தொடர்பாகவும் விசாரணை தொடங்கியது.

Tags :
Advertisement